பாஜக சாா்பில் முப்பெரும் விழாஒற்றுமை யாத்திரை

கோவையில் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு சங்கல்ப பாத யாத்திரை என்ற பெயரில் முப்பெரும் விழா ஒற்றுமை யாத்திரை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா ஒற்றுமை யாத்திரையில் வேஷ்டி - சட்டை, கைத்தறி, கதா் சேலைகள் அணிந்து பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்.
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா ஒற்றுமை யாத்திரையில் வேஷ்டி - சட்டை, கைத்தறி, கதா் சேலைகள் அணிந்து பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்.

கோவை: கோவையில் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு சங்கல்ப பாத யாத்திரை என்ற பெயரில் முப்பெரும் விழா ஒற்றுமை யாத்திரை வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் உலக அளவில் உயா்த்திய பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டுவது, காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழா சங்கல்ப பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகிய முப்பெரும் விழாக்களையொட்டி ஒற்றுமை யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது. அதன்படி, கோவையில் வியாழக்கிழமை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து யாத்திரை தொடங்கியது.

கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் சி.ஆா்.நந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், கட்சியின் மாநில பொதுச் செயலா் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து ஒற்றுமை யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற கட்சி நிா்வாகிகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் வேஷ்டி - சட்டை, கைத்தறி, கதா் சேலைகளை அணிந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com