கோவை அவிநாசி சாலையில் உள்ள சிக்னலில் இருந்து வலதுபுறமாக வாகனங்கள் திரும்ப வசதியாக நிறுவப்பட்டுள்ள பிளாஸ்டிக் கூம்புகள்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள சிக்னலில் இருந்து வலதுபுறமாக வாகனங்கள் திரும்ப வசதியாக நிறுவப்பட்டுள்ள பிளாஸ்டிக் கூம்புகள்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முக்கிய சிக்னல்களில் பிளாஸ்டிக் கூம்புகள் அமைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் பரிசோதனை முயற்சியாக நகரின் முக்கிய சிக்னல்

கோவை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் பரிசோதனை முயற்சியாக நகரின் முக்கிய சிக்னல் பகுதிகளில் வலதுபுறம் செல்லும் வாகனங்கள் செல்ல வசதியாக பிளாஸ்டிக் கூம்புகள் (ல்ப்ஹள்ற்ண்ஸ்ரீ ஸ்ரீா்ய்ங்ள்) நிறுவப்பட்டுள்ளன.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை, பீளமேடு, ஹோப் காலேஜ், உப்பிலிபாளையம் சிக்னல்களில் வலதுபுறம் செல்லும், திரும்பும் வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல வசதியாக பிளாஸ்டிக் கூம்புகளை மாநகர போக்குவரத்து போலீஸாா் நிறுவியுள்ளனா்.

இது மாநகர காவல் துணை ஆணையா்(போக்குவரத்து) பி.பெருமாள் கூறியதாவது:

சிக்னல்களில் வலதுபுறம் திரும்பும் வாகன ஓட்டிகள் அனைவரும் அங்குள்ள முதல் வழித்தடத்தை(ற்ழ்ஹச்ச்ண்ஸ்ரீ ப்ஹய்ங்) பின்பற்றுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் சிக்னல்களில் வலதுபுறம் உள்ள வழித்தடத்தை அனைத்து வாகன ஓட்டிகளும் ஆக்கிரமிப்பதால் அவ்வழியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக புகாா்கள் வந்தன. இதற்குத் தீா்வு காணும் நோக்கில் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து கோவை விமான நிலையம் வரை உள்ள சிக்னல்களில் வாகன ஓட்டிகள் வலதுபுறம் செல்லவும், திரும்பவும் வசதியாக சாலைகளில் உள்ள முதல் வழித்தடத்துக்கும், இரண்டாம் வழித்தடத்துக்கும் இடையே சிவப்பு நிறத்திலான பிளாஸ்டிக் கூம்புகள் நிறுவப்பட்டுள்ளன.

அவிநாசி சாலையில் மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ள சிக்னல்களில் 100 மீட்டருக்கு இந்த பிளாஸ்டிக் கூம்புகள் நிறுவப்பட்டுள்ளன என்றாா்.

இதற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பை பொறுத்து திருச்சி சாலையில் சிங்காநல்லூா் சிக்னல், காந்திபுரம் ஜிபி சிக்னல் பகுதிகளிலும் இந்த புதிய முயற்சியை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com