ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு 26 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் உள்ள ராணுவ வீரர்

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் உள்ள ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாயக்கன்பாளையம் வெங்கிட பெருமாள் மகன் கண்ணாளன் கென்னடி. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தபோது, கடந்த 1993 இல் வீரமரணம் அடைந்தார்.
கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவர். அதன்படி, நிகழாண்டில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் கேப்டன் டீப்சிங் தலைமையில் 35-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கென்னடியின் படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக கென்னடியின் சகோதரர் அண்ணாதுரை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினர், கென்னடியின் சகோதரர்கள் செல்வநம்பி, பார்த்தசாரதி, குப்புஜெயம், மாணவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com