ஓய்வுபெற்ற பேராசிரியர் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

கோவை அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (68). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார். 
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராமு, கடந்த 2016 ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியும் திருடுபோயிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
விசாரணையில், ராமுவைக் கொலை செய்தது கோவை சக்தி நகரைச் சேர்ந்த மனோகரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த மனோகரன் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு கோவை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் மனோகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து மனோகரனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com