பூத் சிலிப்புகளைக் காண்பித்து வாக்களிக்க முடியாது: மாவட்டத் தேர்தல் அலுவலர்

வாக்காளர்களின் தகவலுக்காகவும், வாக்குப்பதிவு மையங்களின் அமைவிடத்தைத் தெரிவிப்பதற்குமே  வாக்குச் சாவடி

வாக்காளர்களின் தகவலுக்காகவும், வாக்குப்பதிவு மையங்களின் அமைவிடத்தைத் தெரிவிப்பதற்குமே  வாக்குச் சாவடி சீட்டுகள் (பூத் சிலிப்) விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதைக் காண்பித்து யாரும் வாக்களிக்க முடியாது எனவும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை தீவிரமாக நடைபெற்ற நிலையில், கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ராசாமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 470 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மட்டும் கூடுதலாக நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதிலும் 1,880 வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றை மாற்றிவிட்டு வேறு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தேவையான அளவுக்கு தொழில்நுட்ப உதவியாளர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். 
கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியையொட்டி உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இதுவரை பெறாதவர்கள் வாக்குப் பதிவு மைய வளாகத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவர்கள் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் இருப்பார்கள். அதேநேரம், இந்த பூத் சிலிப்புகள் வாக்காளர்களின் தகவலுக்காகவும், வாக்குப் பதிவு மையங்கள் தொடர்பான வழிகாட்டுதலுக்காகவுமே வழங்கப்பட்டுள்ளன. பூத் சிலிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் வாக்களிக்க முடியாது. 
வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை வைத்துதான் வாக்களிக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com