தேங்காய் கொள்முதல் செய்து ரூ.2.36 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

தேங்காய் கொள்முதல் செய்து ரூ.2.36 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். 


தேங்காய் கொள்முதல் செய்து ரூ.2.36 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரிஷி என்ற பெண் தேங்காய் வாங்கி, விற்கும் முகவராக உள்ளார். இவர் கோவை ராமநாதபுரத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு புதூரைச் சேர்ந்த தென்னந்தோப்பு உரிமையாளர் சேகர் (45) என்பவரிடம் தேங்காய் விற்பனைக்கு உள்ளதை அறிந்த ரிஷி, அவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, ரூ. 2.36 லட்சம் மதிப்புள்ள 8 டன் தேங்காய்கள் தன்னிடம் விற்பனைக்கு உள்ளதாக சேகர் கூறியுள்ளார். அதனை அனுப்பி வைக்குமாறும், அதற்கான காசோலையை அனுப்பி வைப்பதாகவும் ரிஷி கூறியுள்ளார். இதனை நம்பி லாரி மூலம் தேங்காய்களை ரிஷியின் கேரள முகவரிக்கு சேகர் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகு காசோலை வராததால், ரிஷியின் கேரள முகவரிக்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது, கோவை, ராமநாதபுரம் அலுவலகத்தின் முகவரி கொண்ட காசோலையை ரிஷி கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
இது குறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரிஷியைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com