பசுமை வீடு, அனைவருக்கும் வீடு திட்டம்: கிராமங்களில் அலுவலர்கள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுமை வீடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுமை வீடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளை தேர்வு குறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்கி வருகின்றன. தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சமும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சமும் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ் கூறியதாவது:
கோவை மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டில் பசுமை வீடு மற்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கீழ் 3 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விடுபட்டுள்ள பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வட்டார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதில் இடம் பெயர்ந்தவர்கள், குடிசைகளில் வசிப்பவர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு பயனாளிகளின் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வீடுகளுக்கு மானியம் பெற்றவர்கள் மீண்டும் பட்டியலில் இடம்பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மானியத்தொகையோடு, மானிய விலையில் அரசு சிமென்ட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் வீடு திட்டத்தில் முழுத்தொகையும்,  பசுமை வீடு திட்டத்தில் ரூ.1.80 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. தவிர கூடுதல் தொகைக்கு தேசிய வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ள பயனாளிகள் ஒன்றிய அலுவலகங்களில் மத்திய, மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com