ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் துவக்கிவைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை உள்ளாச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
 கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வார்டு எண். 90, 91 ஆகிய பகுதிகளில் ரூ.49.60 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்கா, எல்இடி தெரு விளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். 
 இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தலைமை வகித்தார். தெற்கு மண்டலம் 91ஆவது வார்டு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கார்டன் பகுதியில் ரூ.13.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பூங்கா, 90ஆவது வார்டு கோவைப்புதூர் பகுதியில் எல்இடி தெரு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.  இதையடுத்து மதுக்கரை, அண்ணா நகர் பகுதியில் பேருந்து சேவையையும், ரூ.25.90 லட்சம் மதிப்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்ன ராமசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com