விவசாயிகளுக்கு இன்று படைப்புழு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்பாடு முறை குறித்த முகாம் கோவை, சுல்தான்பேட்டையில் திங்கள்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது. 

கோவை மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்பாடு முறை குறித்த முகாம் கோவை, சுல்தான்பேட்டையில் திங்கள்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது. 
கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்துக்கான மக்காச்சோள விதைப்பினை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான முகாமை வேளாண்மை துறை நடத்துகிறது. இந்த முகாம் சுல்தான்பேட்டை பாலாஜி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி கூறியதாவது: 
 கடந்த ஆண்டுபோல மக்காச்சோளம் பயிர் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் மேளா நடத்தப்படுகிறது. சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அதிக அளவு மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எனவேதான் முகாமுக்கு இப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேளாண் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் முறை, சாகுபடி மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். எனவே விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com