விவசாயிகளுக்கு மானியத்தில் காய்கறி விதைகள் வழங்க முடிவு

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளன.

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளன.
தோட்டக்கலைத் துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. ரூ. 25 மதிப்புள்ள 5 வகையான காய்கறி விதைகள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ.10 மானியம் கழித்து ரூ.15-க்கு வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 7,040 பாக்கெட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பெயரை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் பதிவு செய்துக்கொள்ளலாம்.
 இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி கூறியதாவது:
 தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறிகள் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக 5 வகையான காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட் ரூ.10 மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 20 பாக்கெட்டுகள் வரை வழங்கப்படும். முன்பதிவு முன்னுரிமை அடிப்படையிலே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதால் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com