கோவை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆம் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06079) மறுநாள் பிற்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதேபோல், ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆம் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com