புதிய தொழில்நுட்பங்களால் வேலையிழப்புஏற்படுவது தற்காலிகமானதுதான்: தொழில்முனைவோர் பயிற்சி முகாமில் தகவல்

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலையின்மை ஏற்படுவது தற்காலிகமானதுதான் என கோவையில்

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலையின்மை ஏற்படுவது தற்காலிகமானதுதான் என கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கற்றல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
 தொழில்முனைவோர் நிறுவனத்தின் (இ.ஓ.) கோவை கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ரஜினிகாந்த், நிர்வாகிகள் வாஜிநாத், சுராஜ் சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அமெரிக்காவின் சிங்குலாரிட்டி பல்கலைக்கழக தொழில்முனைவுத் துறை இணை நிறுவனரும், தொழில்முனைவு சிறப்புப் பேச்சாளருமான பாஸ்கல் பினெட் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தொழில்முனைவோர் நிறுவனம் என்ற இந்த அமைப்பு சர்வதேச அளவில் 55 நாடுகளில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் இதன் தலைமையகம் உள்ளது. இதில் ஜவுளி உற்பத்தி, சில்லறை வர்த்தகம், ஆடைகள் தயாரிப்பு, ஆபரணங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி அனைத்துத் துறைகளிலும் புதிய மாறுதல்களை அடைந்து வருகின்றன. இதைப் பயன்படுத்தி புதுமையான முறையிலும், லாபகரமான முறையிலும் தொழில் செய்யலாம். புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலையின்மை ஏற்படுவது தற்காலிகமானதுதான். ஆனால் அது வேறு வகைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும். புதிய தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு தொழில்களை நடத்த தொழில்முனைவோருக்கு ஊக்கமும், பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com