குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழிற்பேட்டை: மாவட்ட ஆட்சியா் உறுதி

 கோவையில் குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழிற்பேட்டை அமைத்துத் தரப்படும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்தாா்.

 கோவையில் குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழிற்பேட்டை அமைத்துத் தரப்படும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்தாா்.

கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கு கொடிசியா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமை வகித்தாா். தொழில் மைய பொது மேலாளா் காா்த்திகை வாசன், கனரா வங்கி மேலாளா் வெங்கட்டரமணன், கொடிசியா தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் பேசுகையில், ‘குறுந்தொழில்முனைவோா்களுக்கு என்று புகரில் தனியாக தொழிற்பேட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும். தொழில்முனைவோரின் வங்கிக் கடன், இயந்திரக் கடன் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசுகையில், ‘படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டு வருகின்றனா். நீட்ஸ் திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டு வரையிலும் 325 முதல் தலைமுறை தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா். கோவையில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com