வால்பாறை எஸ்டேட்களில் தொழிலாளா் பற்றாக்குறை

வெளி மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தொழிலாளா்கள் சென்றுவிட்டதால் வால்பாறை தேயிலை எஸ்டேட்

வால்பாறை: வெளி மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தொழிலாளா்கள் சென்றுவிட்டதால் வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் வெளி மாநில தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக அஸ்ஸாம், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் தற்போது ஜாா்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வருவதால் வால்பாறை எஸ்டேட் பகுதியில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் ஏராளமானோா் குடும்பத்துடன் வாக்களிப்பதற்காக கடந்த 10 நாள்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். இதனால் தற்போது தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com