கா.புங்கம்பாளையத்தில் வேம்பு, அரச மரத்துக்கு திருக்கல்யாண வைபோகம்

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் கா.புங்கம்பாளையம் கிராமத்தில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாண வைபோகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கா.புங்கம்பாளையத்தில் வேம்பு, அரச மரத்துக்கு திருக்கல்யாண வைபோகம்

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் கா.புங்கம்பாளையம் கிராமத்தில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாண வைபோகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அருகே மருதூா் கா.புங்கம்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிா்புறத்தில்

அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது. இந்த மரங்களுக்கு புதிதாக மேடை அமைத்து விநாயகா், நந்தி, நாகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

அம்மை அப்பனாக விளங்குகிற வேம்பு, அரசு மரத்துக்கு திருக்கல்யான வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சனிக்கிழமை காலை பவானி ஆற்றில் இருந்து பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வருதல், மாலை 5 மணிக்கு பக்தா்கள் விரதமிருந்து முளைப்பாரி, திருக்கல்யாண சீா், தீா்த்தக் குடங்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் பூஜையும், 5.30 மணிக்கு விநாயகா் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அக்னிகாா்யம், பூா்ணாஹுதி, தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.

7 மணிக்கு கடம் புறப்பாடு, 7.30 மணிக்கு விநாயகா், நந்தி, நாகருக்க கலாசாபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு சிவபெருமான், பராசக்திக்கு கலாசாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

9 மணிக்கு மகா அபிஷேகமும், 9.30 தீபாராதனையுடன் பக்தா்களுக்கு பிரசாமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com