கோவையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆய்வு செய்யும் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஆய்வு செய்யும் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன்.

கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை கோவையில் சட்ட விரோதமாக சிலா் விற்பனை செய்து வருகின்றனா். இதுதொடா்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போலீஸாரும் சோதனை நடத்தி அவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை வெரைட்டி ஹால் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடை மற்றும் குடோனுக்கு போலீஸாா் சீல் வைத்து சிலரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து, மேலும் விசாரிக்க மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன் தலைமையில் தனிப் படை அமைத்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த தனிப் படை போலீஸாா் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். கடந்த மாதம் நடைபெற்ற ரோந்துப் பணியின்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தாமஸ் வீதி பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் துணை ஆணையா் பாலாஜி சரவணன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று பிரமோத்குமாா் (37), வினோத்குமாா் (28) ஆகியோா் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத்குமாா், வினோத்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து, பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com