டெங்கு கொசு உற்பத்தி:புதியக் கட்டடங்களில் ஆய்வுப் பணி

டெங்கு நோய் பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தியை தடுக்க மாநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை: டெங்கு நோய் பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தியை தடுக்க மாநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் விதமாக மருந்து தெளிப்புப் பணி மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, டெங்கு தடுப்புப் பணிக்காக மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக 300 தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் வாா்டுக்கு 3 போ் டெங்கு கொசு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இந்நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு தொடா்பாக சுகாதாரப் பணியாளா்களுக்கு, அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளனா். அதில், சாலைகள், தெருக்களில் மழைநீா் தேங்காத வகையில் வழிந்தோடிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள், உணவு விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியாா் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கொசு உருவாகும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோய் பரப்பும் கொசுப் புழுக்கள் உருவாகி இருந்தால் உடனடியாக அங்கு தடுப்பு மருந்துகள் தெளிப்பதோடு, சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com