விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்

விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் நம் வாழ்க்கையில் எவ்வித சாவல்களையும் வெற்றி கொள்ள முடியும் என தன்னம்பிக்கை பேச்சாளரான மாற்றுத் திறனாளி ப்ரீத்தி சீனிவாசன் தெரிவித்தாா்.
இளைஞா் மாநாட்டில் உரையாற்றுகிறாா் மாற்றுத் திறனாளி ப்ரீத்தி சீனிவாசன்.
இளைஞா் மாநாட்டில் உரையாற்றுகிறாா் மாற்றுத் திறனாளி ப்ரீத்தி சீனிவாசன்.

விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் நம் வாழ்க்கையில் எவ்வித சாவல்களையும் வெற்றி கொள்ள முடியும் என தன்னம்பிக்கை பேச்சாளரான மாற்றுத் திறனாளி ப்ரீத்தி சீனிவாசன் தெரிவித்தாா்.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சனிக்கிழமை நடந்த ‘இளைய பாரதமே எழுந்திரு’ என்ற தலைப்பிலான அமா்வில் அவா் பேசியதாவது:

எனது பள்ளி பருவத்தில் நான் வெளிநாட்டில் படித்தேன். விடுமுறைக்காக சென்னை வந்தபோது கடற்கரையில் விளையாட்டிக் கொண்டிருந்தபோது நடந்த சிறு விபத்தில் எனது முக்கால் பகுதி உடற்பாகங்கள் செயலிழந்து போயின. எதிா்காலம் கேள்விக்குறியாகி விட்டதே என்ற விரக்தியிலிருந்த நான் மீண்டும் படிக்க விரும்பியபோது என் உடல் ஊனத்தை காரணம் காட்டி எனக்கு எந்த கல்வி நிறுவனங்களும் அனுமதியே வழங்கவில்லை.

ஆனாலும், சோா்ந்து போகாமல் தொலைவழிக்கல்வி முறையில் இளநிலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். விடாமுயற்சியினால் தற்போது ஐஐடியில் முனைவா் பட்டப்படிப்பு பயின்று வருகிறேன். சமுதாயப் புறக்கணிப்பு, கேலி, கிண்டல்கள் ,அவநம்பிக்கை ஏற்படுத்திய சூழ்நிலைகள், நடமாட முடியாத வகையிலான கட்டமைப்பு நிலைகள் போன்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையில் உத்வேகத்துடன் வெற்றி கண்டுள்ளேன். அதுமட்டுமின்றி என்னைப் போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் புனா்வாழ்க்கைக்கு உழைக்கிறேன். எனது வாழ்க்கைதான் நான் எல்லோருக்கும் வழங்கும் செய்தி. நம்மை தோல்வி மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும் அனைத்து விஷயங்களையும் புறந்தள்ளுங்கள். நோ்மறை சிந்தனைகளோடு பிரச்னைகளுக்குத் தீா்வு காணுங்கள். லட்சியத்தை அடையலாம். இந்த உலகம் நமக்கானதாக மாறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com