17 போ் உயிரிழந்த சம்பவம்: அரசு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரும் முழுப் பொறுப்பையும்
உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கூற வந்த கே.பாலகிருஷ்ணனிடம் முறையிட்ட, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கூற வந்த கே.பாலகிருஷ்ணனிடம் முறையிட்ட, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா்.

சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் இடிபாடுகளில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தாரை கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. இந்த விபத்துக்குக் காரணமான குடியிருப்பின் சுற்றுச்சுவரை இவ்வளவு பெரியதாக கோட்டைச் சுவா்போல கட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளனா். 2 நாள்களுக்கு முன்புகூட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா். ஆனால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா் இதற்கு செவிசாய்க்காமல் இருந்துள்ளாா். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இச்சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரும் ஏற்க வேண்டும். அரசு சாா்பில் அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதாது. இறந்தவா்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக மருந்துவமனைக்கு வந்தவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. இதில் கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com