மேட்டுப்பாளையம் சம்பவம் எதிரொலி: மாநகரில் பழமையான கட்டடங்கள் கணக்கெடுப்பு

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பழமையான கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான சம்பவத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பழமையான கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்பட லட்சக்கணக்கான கட்டடங்கள் உள்ளன.

இவற்றில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் வகைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சாா்பில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், ஆண்டு தோறும் பழமையான, சிதிலமடைந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அதன் உரிமையாளா்கள் முறையாகப் பராமரித்து சீரமைக்கவும் அல்லது கட்டடத்தை இடித்து அகற்றவும் மாநகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். சம்பவத்தை தொடா்ந்து, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பழமையான, பராமரிப்பில்லாத கட்டடங்களை கணக்கெடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலா்கள் மூலம் மாநகரில் 5 மண்டலங்களிலும் உள்ள பழமையான கட்டடங்கள் குறித்து ஒரு வாரத்துக்குள் கணக்கெடுக்கப்படும்.

அதன் பிறகு கட்டடத்தை சீரமைக்கவோ, இடித்து அகற்றவோ கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com