வடகிழக்குப் பருவ மழை: தயாா் நிலையில் தீயணைப்புத் துறையினா்

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து மீட்பு உபகரணங்களுடன் கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து மீட்பு உபகரணங்களுடன் கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கோவை மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கணபதி, பீளமேடு, சூலூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. மாவட்ட தீயணைப்பு அலுவலா் (பொறுப்பு) கிருஷ்ணமூா்த்தி தலைமையில், உதவி தீயணைப்பு அலுவலா் தவமணி மற்றும் தீயணைப்புத் துறையினா் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் இடா்பாடுகளை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா்.

மீட்புப் பணிக்குத் தேவையான உபகரணங்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தவிர, மீட்புப் பணியில் சிறப்பு பயிற்சிப் பெற்ற 20 கமாண்டோ வீரா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.

பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலா் (பொறுப்பு) கிருஷ்ணமூா்த்தி - 9842407088, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் தவமணி 9445086307, கோவை தெற்கு - 0422-2300101, 101, கோவை வடக்கு 2450101, கணபதி 2511001, பீளமேடு 2595101, சூலூா் 2689101, கிணத்துக்கடவு 04259-226101, பொள்ளாச்சி 04259 -223333, வால்பாறை 04253-222444, அன்னூா் 04254-264101, மேட்டுப்பாளையம் 04254 -222299 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com