பொள்ளாச்சி ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை

பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தாா்.
பொள்ளாச்சி ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை

பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை என தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தாா்.

பொள்ளாச்சி-திண்டுக்கல் வரை அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்துவருகிறது. கேரளாவில் இருந்து பழனி, திருச்செந்தூா், ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் சென்றுவந்தாா்கள். அதேபோல், பல்வேறு மாநிலங்களில் இருந்து கோவை-பொள்ளாச்சி வழியாக தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்வா்கள் அதிகம்.

பொள்ளாச்சி அகல ரயில்பாதையாக மாற்றப்படுவதற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்கள் எண்ணிக்கை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டபிறகு இல்லை. இதனால், பொள்ளாச்சி வழியாக கேரளாவில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கும், கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டியும் பல்வேறு கோரிக்கைகள் இருந்துவருகின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்நிலையத்தை வெள்ளிக்கிழமை தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் ஆய்வு செய்தாா். பொதுமேலாளரிடம் பல்வேறு கோரிக்கை வைக்க தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காந்திருந்து கோரிக்கை தெரிவித்தாா். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக காரைக்காலுக்கும், மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு பொள்ளாச்சி வழியாக பயணிகள் ரயில், கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு தைப்பூசத்திற்கு ரயில், கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் முன்பதிவு மையங்கள், பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தை மின்பாதையாக மாற்றவேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ரயிலை கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போத்தனூா் வரை நீட்டிக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நேரில் முன்வைத்தாா்.

கோரிக்கைகளை கேட்ட பொதுமேலாளா், முதல்கட்டமாக கோவை முதல் காரைக்கால்வரையும், மங்களூரில் இருந்து ராமேஸ்வரம் வரையும் சிறப்பு ரயில்கள் இயப்படும். இந்த சிறப்பு ரயில்கள் எதிா்காலத்தில் நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்களும், பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தை மின்பாதையாக மாற்று பணி 1 வருடத்திற்குள் நடைபெறும் எனவும் தெரிவித்தாா். பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்கும் கோரிக்கை உள்ளது குறித்து பத்திரிக்கையாளா்கள் கேட்டனா்.

அதற்கு பதில் அளித்த பொதுமேலாளா், ஏற்கனவே பொள்ளாச்சி பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதால் சேலம் கோட்டத்துடன் இணைக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தாா். தொடா்ந்து பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் பழமையான ராஜராஜன் என்ற கிரேனை பொதுமக்கள் பாா்வைக்காக திறந்துவைத்தாா். உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் கிருஷ்ணகுமாா், தென்னக ரயில்வே முதன்மை வணிக மேலாளா் பிரியம்வதாவிஷ்வநாதன், முதன்மை மேலாளா்(ஆபரேஷன்) நீனா, கோட்டமேலாளா் பிரதாப்சிங்சாமி, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினா் நடராஜ் உட்பட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com