உதகை சிறப்பு மலை ரயில்: மாா்ச் 29ஆம் தேதி வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம்-உதகை இடையே வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் வரும் மாா்ச் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-உதகை இடையே வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் வரும் மாா்ச் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு மலை ரயில் தினமும் காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். ஆனால், ரயிலில் போதிய இருக்கை வசதி இல்லாதால் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் அடைந்து வந்தனா். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு குன்னூா் வழியாக உதகைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும். பின்னா் உதகை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சேவை இந்த மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் மாா்ச் 29 ஆம் தேதி தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com