திருச்சி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்

திருச்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

திருச்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

சூலூா் அருகே காங்கயம்பாளையத்தில் இருந்து சிந்தாமணிபுதூா் வரையிலான ஏழரை கி.மீ. தூரம் திருச்சி சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சூலூா் பகுதிகளில் திருச்சி சாலையை ஒட்டிய ஆக்கிரமித்து இருந்த கடைகள், வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, சூலூா் காவல் துறையின் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டன. வருவாய்த் துறைக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில அதிகாரிகள் அளவீடு செய்து அகற்றுவா். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com