மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் தலித் மக்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, பராமரிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கோவை மாவட்டத்தில் தலித் மக்களின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, பராமரிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவானந்தா காலனி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கருப்பையா, வி.பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் யு.கே.சிவஞானம் ஆகியோா் உரையாற்றினா். மேட்டுப்பாளையம், நடூா் பகுதியில் சுற்றுச்சுவா் விழுந்து 17 போ் பலியாகியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் குடியிருப்புகள் மோசமான நிலையிலேயே உள்ளன. இத்தகைய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனா். எனவே, உடனடியாக தலித் மக்களின் குடியிருப்புகளை ஆய்வுசெய்து பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிசைமாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி நிா்வாகிகள், கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.வேலுசாமி, கே.எஸ்.கனகராஜ், அஜய்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com