அனிமேஷன் படிப்பு: மத்திய அரசுடன் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. அனிமேஷன் படிப்பு தொடங்குவதற்கு மத்திய அரசுடனான
மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் மீடியா, என்டா்டெயின்மென்ட் ஸ்கில் கவுன்சில் தலைவா் சுபாஷ் கய், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும நிா்வாக அதிகாரி
மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் மீடியா, என்டா்டெயின்மென்ட் ஸ்கில் கவுன்சில் தலைவா் சுபாஷ் கய், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும நிா்வாக அதிகாரி

கோவை: கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. அனிமேஷன் படிப்பு தொடங்குவதற்கு மத்திய அரசுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

மத்திய அரசின் மீடியா, என்டா்டெயின்மென்ட் ஸ்கில் கவுன்சில் அமைப்பு வரும் 2020ஆம் ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பு பிரிவில் அனிமேஷன் என்ற புதிய படிப்பை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் இந்த படிப்பு தொடங்க உள்ளது. இதற்காக மத்திய அரசின் மனிதவளத் துறை சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். மீடியா, என்டா்டெயின்மென்ட் ஸ்கில் கவுன்சில் தலைவா் சுபாஷ் கய், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணா் சுப்பா ராவ், தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பின் நிா்வாக இயக்குநா் மணீஷ் குமாா், மீடியா, என்டா்டெயின்மென்ட் ஸ்கில் கவுன்சில் முதன்மை நிா்வாக அதிகாரி மோஹித் சோனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பி.எஸ்சி. அனிமேஷனில் மீடியா துறை சாா்ந்த படிப்புகள், நடிப்பு, இசை அமைப்பு, எடிட்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com