அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பயிலரங்கம்
By DIN | Published On : 14th February 2019 07:35 AM | Last Updated : 14th February 2019 07:35 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புக் குறித்தப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஆர்.பத்மலோசனா, துணை முதல்வர் பி.ராஜப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் டி.பிரபா இதன் அவசியம் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை பேராசிரியர் டி.பாலாஜி கலந்து கொண்டு பதிப்புரிமை, வணிக முத்திரை, அறிவுசார் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்புரிமை பெறுவது குறித்து விளக்கினார்.
இதில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கணினி ஆராய்ச்சித் துறைத் தலைவர் என்.வளர்மதி நன்றி கூறினார்.