சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 15th February 2019 09:44 AM | Last Updated : 15th February 2019 09:44 AM | அ+அ அ- |

கோவை அருகே கருமத்தம்பட்டி நால் ரோட்டை விரிவாக்கம் செய்யக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கருமத்தம்பட்டி பகுதியில் ஆறுவழிச் சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டியில் உள்ள அணுகு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. எனவே, அணுகு சாலையை உடனடியாக அகலப்படுத்தவேண்டும். கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழல் குடை அமைத்துத்தர வேண்டும் என்றனர். இந்தப் போராட்டத்தில், சூலூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ஆனந்தகுமார், சமூக சேவகர் பிரபாகரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.