பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் பணிமனை

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் குறித்த தேசிய பணிமனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் குறித்த தேசிய பணிமனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக அலுவலர் பத்மலோசனா முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் சி.ரங்கராஜன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.அனுசுயா பணிமனையின் நோக்கம் குறித்து விளக்கினார். தொடர்ந்து நடந்த அமர்வுகளில் ஆர்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இயக்குநர் கிறிஸ்டோபர், சென்னை சென்செபிள் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் நரேந்திரன் தேவராஜ், புதுதில்லியிலுள்ள சர்வதேச கணினி கல்வி மையப் பொறியாளர் பார்த்திபன் பழனிசாமி ஆகியோர் தற்காலத்தில் கணினித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விளக்கினர். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆராய்ச்சித் துறைத் தலைவர் என்.வளர்மதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com