3 பள்ளிகளில் 704 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 17 , 16, 20 ஆகிய வார்டுகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 17 , 16, 20 ஆகிய வார்டுகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிஹக்கிழமை நடந்தது. தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பி..ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, வடவள்ளியில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி, சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள சாபூல் சந்த் வீர்சந்த்  அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 11, 12ஆம் வகுப்புகளில் பயிலும் 704 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 
இதில் பள்ளி தலைமை ஆசிரியைகள் வசந்தா, செல்வகுமாரி, சரவணன், வடவள்ளி பகுதி செயலாளர் புதூர் செல்வராஜ், 17, 15,  20ஆவது வட்ட செயலாளர்கள் ராயப்பன், ராஜேந்திரன், நடராசன், அவைத் தலைவர் முருகேசன், சுந்தரம், நாரயணசாமி, ஜெயசந்திரன்,வழக்குரைஞர் மனோகரன், புறநகர் மாவட்ட  மாணவரணி இணைச் செயலாளர் கருப்புசாமி, கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com