குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுக் கூட்டம் நிர்வாகி எஸ்.மோகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் இன்றைய அரசியல் சூழல் குறித்து கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், உரையாற்றினார். 
இக் கூட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாத இடங்களில் தான் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.தேவராஜ், சி.சிவசாமி, மாவட்டப் பொருளாளர் யு.கே.சுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.கண்ணப்பன், கே.எம்.செல்வராஜ், வே.வசந்தகுமார், எம்.குணசேகர், ஏ.அúஷ்ரப் அலி, எம்.நிர்மலா, ஜெ.கலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com