சூலூரில் பரிசல் போட்டி: மூதாட்டிக்கு முதல் பரிசு

சூலூரில் பெரிய குளத்தில் பரிசல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் 62 வயது

சூலூரில் பெரிய குளத்தில் பரிசல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் 62 வயது மூதாட்டி முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 
சூலூர் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் சூலூரில் உள்ள பெரிய குளத்தில் பரிசல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் ஆண்கள் பிரிவில் 30 பேர், பெண்கள் பிரிவில் 40 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 10ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடக்கும் இந்தப் பரிசல் போட்டியில் ஆண்கள் பிரிவில் சூரியமுருகன் (40) முதல் பரிசை வென்றார். இரண்டாவது இடத்தை எஸ்.கே.எம். தம்பி (37), மூன்றாவது இடத்தை மனோகரன் (35) ஆகியோர் பெற்றனர். இவர்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கோவை மாவட்டம், நீலாம்பூர் அருகே உள்ள ஆச்சான்குளத்தில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர்.
பெண்கள் பிரிவு போட்டியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.கே.எம்.சின்னகண்ணு (62) என்ற மூதாட்டி முதல் பரிசை வென்றார். இரண்டாவது பரிசை செல்வி (35), மூன்றாவது பரிசை மேகலா (32) ஆகியோர் பெற்றனர். இந்தப் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சூலூர் நண்பர்கள் நற்பணி மன்றத் தலைவர் கருணாநிதி, மீனவர் சங்கத் தலைவர் ஆறுமுகம், பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் செல்வகுமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர், திமுக நகர செயலாளர் ஜெகநாதன், எஸ்.எம்.காதர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com