மருதமலையில் ஜனவரி 21 இல் திருக்கல்யாணம், தேரோட்டம்

கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஜனவரி 21 ஆம் தேதி ) திருக்கல்யாணம் மற்றும் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.

கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஜனவரி 21 ஆம் தேதி ) திருக்கல்யாணம் மற்றும் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.
 முருகப் பெருமானின் ஏழாவது படை வீடாக போற்றப்படும் மருதமலையில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதே போல், நிகழாண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி 14-ஆம் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கோ பூஜையை தொடர்ந்து மூலவருக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் போன்ற வசானை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகருக்கு பூஜை, மண் எடுத்தல் முளைப்பாலிகை ஈடுதல், மருதாசல மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கங்கணம் கட்டப்பட்டது. 
 இதையடுத்து கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. பின்பு வேள்வி பூஜை நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையோடு வீதி உலா வந்தார். இதைத் தொடர்ந்து ஜனவரி 24-ஆம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், நாள்தோறும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடுகளும் நடத்தப்படும். இவ்விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 21 ஆம் தேதி ) நடைபெறுகிறது. 
 முன்னதாக அதிகாலை 4 மணிக்கு  நடை திறக்கப்பட்டு யாகசாலை பூஜை நடத்தப்படும். பின்னர் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
 இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் பகல் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com