பாண்டியாறு - மாயாறு இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தல்

கோதாவரி - காவிரி திட்டத்துக்கு முன்னோடியாக பாண்டியாறு - மாயாறு இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோதாவரி - காவிரி திட்டத்துக்கு முன்னோடியாக பாண்டியாறு - மாயாறு இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
இழந்துவிட்ட பாசன உரிமைகளை மீட்கும் விதமாகவும், 1958 முதல் நடந்து வந்த நீர் நிர்வாகத் தவறுகள் நடைபெறாமல் இருக்கவும் ஈரோட்டில் வரும் 23-ஆம் தேதி கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், சுமார் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். 
தேசிய அளவிலான நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காவிரி மேலாண்மை ஆணையமும், அரசுகளும் முழுமையாக செயல்படுத்தவில்லை. இதுதொடர்பாக உடனடியாக மறுசீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 
பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை  நிறைவேற்றினால் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். முதல் கட்டமாக, பாண்டியாற்றை மோயாற்றுடன் இணைக்க வேண்டும். கோதாவரி - காவிரி திட்டத்துக்கு முன்னோடியாக பாண்டியாறு - மோயாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த குறைந்த செலவே ஆகும். நாட்டில் உள்ள நீர்ப் பாசன பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவே நீர்ப் பாசனத் துறையை ஏற்படுத்தி, தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com