சூலூர் பகுதி நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்

சூலூர் வட்டத்துக்கு உள்பட்ட இருகூர், நீலம்பூர் வழங்கு வாய்க்காலில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.



சூலூர் வட்டத்துக்கு உள்பட்ட இருகூர், நீலம்பூர் வழங்கு வாய்க்காலில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
 கோவை மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டில் 45 குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.7.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சூலூர் வட்டத்துக்கு உள்பட்ட இருகூர், நீலம்பூர் வழங்கு வாய்க்காலிலுள்ள மதகுகள் பழுது பார்த்து, புனரமைக்கும் பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
 இப்பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், நொய்யல் பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரம்) ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆச்சாங்குளத்தில்: சூலூர் அருகே உள்ள ஆச்சாங்குளத்துக்கு கூடை தட்டி ஏரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இக்குளமானது சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் தற்போது சுமார் 100 ஏக்கர் பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் இக்குளத்தை தூர்வாரும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் தோப்பு அசோகன், வட்டாட்சியர் மீனாகுமாரி, சூலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 குளத்தினைதூர்வார அரசு ரூ. 10 லட்சமும், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com