ஊருக்குச் சென்று திரும்பாத தோட்ட தொழிலாளர்களால் பணி பாதிப்பு

ஊருக்கு சென்று திரும்பாத வெளி மாநில தோட்டத் தொழிலாளர்களால் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு சென்று திரும்பாத வெளி மாநில தோட்டத் தொழிலாளர்களால் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேரத்தை பார்க்காமல் கூடுதல் நேரம் பணியாற்றி ஊக்கத்தொகையும் பெறுவதால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சமீபகாலமாக எஸ்டேட் நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அனைத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலத்துக்கு 
குடும்பத்துடன் சென்றனர். அவ்வாறு சென்ற தொழிலாளர்களில் சிவர் மட்டும் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். தற்போது, மழைக்கு பின் அடித்த வெயில் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் வராததால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு இருப்பதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com