ஜமாபந்தி: கோவை வடக்கு, தெற்கு வட்டத்தில் 341 மனுக்கள்

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் கோவை வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் 341 மனுக்கள் பெறப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் கோவை வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் 341 மனுக்கள் பெறப்பட்டன. 
கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஜமாபந்தி தொடங்கியது. இதில் பொது மக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, உழவர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்பட்டன. 
இதில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை என 244 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித்தொகை கேட்டு அதிகபட்சமாக 112 மனுக்கள் அளிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட 97 மனுவில் அதிகபட்சமாக முதியோர் உதவித் தொகை கேட்டு 80 மனுக்கள் பெறப்பட்டன. இந்த இரண்டு வட்டத்திலும் முதல் நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 341 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com