வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம், ஆசிரியர் காலனி  ராஜ அஷ்ட விமோசன மகாகணபதி கோயிலில் வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

மேட்டுப்பாளையம், ஆசிரியர் காலனி  ராஜ அஷ்ட விமோசன மகாகணபதி கோயிலில் வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
வடுக பைரவர் சன்னதி முன் நவ கலசங்கள் வைக்கப்பட்டு புண்ணியாக வாசனம், கணபதி பூஜை,  மகா கணபதி யாகம், நவகிரக யாகம், பைரவர் யாகம் உள்ளிட்டவை நடைபெற்று கலசங்கள் கோயிலை வலம் வந்து வடுக பைரவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com