மேட்டுப்பாளையம்-காரமடை இடையே 4 வழிச் சாலை அமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 08th March 2019 07:47 AM | Last Updated : 08th March 2019 07:47 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம்-காரமடை இடையே 5 கி.மீ. தொலைவுக்கு சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை 5 கி. மீ. தொலைவு சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் இருவழி சாலையாக உள்ளது.
இதை ரூ. 14.95 கோடி மதிப்பில் 15.61 மீட்டர் அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இதில், ஏ.கே. செல்வராஜ் எம்.பி., ஓ.கே சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பணிகளைத் தொடங்கிவைத்தனர்.