சூலூர் இடைத்தேர்தல்:  26 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

சூலூர் இடைத்தேர்தல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக, திமுக

சூலூர் இடைத்தேர்தல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக, திமுக உள்ளிட்ட  22 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், அதிமுக வேட்பாளர் பி.கந்தசாமி, திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி,  அமமுக வேட்பாளர் கே.சுகுமார், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி.மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.வி.விஜயராகவன், ஊழல் ஒழிப்பு, எதிர்ப்பு இயக்கத்தின் வேட்பாளர் எம்.சந்தோஷ்குமார்,  உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே.சண்முகம் உள்பட  22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களால் 26 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட மற்ற வேட்பாளர்கள் விவரம்:  வி.கணேசன், எல்.கதிரேசன், பி.என்.கந்தசாமி, பி.கந்தசாமி, பி.கார்த்திகேயன், ஏ.நூர்முகமது, கே.பழனிசாமி, கே.பாலமுருகன்,ஆர்.ஈஸ்வரமூர்த்தி, டி.உமர் அலி, டி.பிரபாகரன், வி.புஷ்பானந்தம், வி.முருகன், பி.ரமேஷ்குமார், எஸ்.டி.ராஜாவேலுசாமி  ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வியாழக்கிழமை (மே 2) கடைசிநாளாகும். இதனை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com