சூலூர் இடைத்தேர்தல் நெறிமுறை மீறல்: 22 புகார்கள் பதிவு

சூலூர் இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 22 புகார்கள்

சூலூர் இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 22 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. 
தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை மக்கள் நேரடியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க 1800-425-4757 என்ற இலவச எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் புகார்களைக் கேட்பதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான அலுவலர்கள்  சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலும் சூலூர் இடைத்தேர்தலில் விதிமீறல் குறித்து 22 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள்கூறியதாவது: 
சூலூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 22 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் குறித்த புகார்களே வந்துள்ளன. இதில் 2 மட்டும் பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து புகார்களும் அந்தந்தப் பகுதியில் உள்ள பறக்கும் படை குழுக்குகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி ஆய்வு செய்து தீர்வு காணப்பட்டன என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com