சூலூரில் மிக் 21 ரக விமானத்தில் பறந்த இந்திய விமானப் படைத் தளபதி
By DIN | Published On : 18th May 2019 06:29 AM | Last Updated : 18th May 2019 06:29 AM | அ+அ அ- |

சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வந்துள்ள இந்திய விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா, மிக் 21 ரக விமானத்தில் தனியாகப் பறந்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரில் இந்திய விமானப் படையின் படைத்தளம், பழுதுபார்க்கும் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆய்வுக்காக சூலூருக்கு வந்துள்ள விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா, மிக் 21 ரக போர் விமானத்தில் சனிக்கிழமை தனியாகப் பறந்து ஆய்வு நடத்தினார்.
இதைத் தொடர்ந்து விங் கமாண்டர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அண்மையில் பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதற்காக சென்றபோது அந்நாட்டு ராணுவத்தால் பிடிபட்ட விங் கமாண்டர் அபிநந்தனும் மிக் 21 ரக போர் விமானத்தையே பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.