இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்: ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழா மாநாடு மசக்காளிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவைப் பகுதி தலைவர் எம்.கஜேந்திரன் தலைமை வகித்தார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அமானுல்லா கான், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இம்மாநாட்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் மதவெறி அமைப்புகளை தனிமைப்படுத்த வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். பீரிமியத்துக்கு பிரத்யேக  வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 
இதில் தலைவராக எம்.கஜேந்திரன், பொதுச்செயலாளராக கே.துளசிதரன், பொருளாளராக கே.மணிகண்டன் மற்றும் இணைச் செயலாளராக டி.தில்லைகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com