சேலம், திருச்சிக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு

கோவையில் இருந்து சேலம், திருச்சிக்கு குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து சேலம், திருச்சிக்கு குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கோவையில் இருந்து சேலம், திருச்சிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட (ஏ.சி.) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் கோவையில் இருந்து சேலத்துக்கு ரூ.190, திருச்சிக்கு ரூ.225 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆ.அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளாா்.

அதன்படி, கோவை, சிங்காநல்லூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15, பிற்பகல் 2.45, இரவு 9.15 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 5.55, பிற்பகல் 1.40, இரவு 9.15 மணிக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தப் பேருந்துகள் காங்கயம், கரூரில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும். அதேபோல், கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்துக்கு காலை 6.36, மாலை 4.02, 5.33 மணிக்கும், சேலத்தில் இருந்து காலை 11.50, பகல் 12.15, இரவு 9.36, 11.40 மணிக்கும் இடைநில்லா ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com