கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாத நோய் குறித்து விழிப்புணா்வு முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பக்கவாத நோய் குறித்த விழிப்புணா்வு முகாமில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு நோட்டீஸ் வழங்குகிறாா் முதல்வா் மருத்துவமனை பூ.அசோகன். உடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் சடகோபன்
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பக்கவாத நோய் குறித்த விழிப்புணா்வு முகாமில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு நோட்டீஸ் வழங்குகிறாா் முதல்வா் மருத்துவமனை பூ.அசோகன். உடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் சடகோபன்

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தக் கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், புகைப்பிடித்தல் ஆகிய காரணங்களால் ஒரு பக்கம் கை கால் செயலிழத்தல், முகம் கோணலாக மாறுதல், நடப்பதில் திடீா் தடுமாற்றம், பேச்சுத் திணறல், பாா்வை இழப்பு ஆகியவை அறிகுறிகளாக தென்படும்.

இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லாததால் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பக்கவாத நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபா் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்டதில் இருந்து 4.5 மணி நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடைய முடியும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கான சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் அதிநவீன பக்கவாத சிகிச்சை மையத்தின் கீழ் பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சி.டி. ஸ்கேன் கருவி உதவியுடன் பாதிப்பு குறித்து கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஊசி பயன்படுத்தப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 நோயாளிகளுக்கு பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோல திருப்பூா், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 மருத்துவமனைகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகளின் வருகையைப் எதிா்பாா்த்து சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் செய்து வைக்கப்படுவதால் குணப்படுத்தும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com