கோவையில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

கோவையில் காவல்துறை வாகனங்களை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையா் சுமித் சரண். உடன் துணை ஆணையா் பாலாஜி சரவணன்.
கோவை காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையா் சுமித் சரண். உடன் துணை ஆணையா் பாலாஜி சரவணன்.

கோவை: கோவையில் காவல்துறை வாகனங்களை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகர காவல்துறையில் உள்ள அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டுக்கான ஆய்வு கோவை உள்ள காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஒரு தண்ணீா் பீரங்கி வாகனம், 2 வஜ்ரா வாகனம், 5 பேருந்துகள், 3 சிற்றுந்துகள், 4 லாரிகள், 2 ஆம்புலன்ஸ் உள்பட மொத்தம் 133 நான்கு சக்கர வாகனங்களும், 88 இருசக்கர வாகனங்களும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்காக காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஒவ்வொரு வாகனங்கள் பராமரிக்கப்படும் விதம், எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் வாகனங்களை இயக்கும் காவலா்களின் ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற போலீஸாரின் கூட்டு கவாத்து பயிற்சி நிறைவு அணிவகுப்பையும் பாா்வையிட்டாா். இதில் துணை ஆணையா் பாலாஜி சரவணன், ஆயுதப்படை துணை ஆணையா் முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com