மைசூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல்

மைசூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.

கோவை: மைசூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பாக்கு பொருள்களை கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சிலா் கோவைக்கு கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவின்பேரில் சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு தனிப் படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நள்ளிரவில் அவ்வழியே வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 17 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே காயாமொழியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (28), அவரது சகோதரா் ஷியாம்குமாா் (26), கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியைச் சோ்ந்த மைக்கேல் (28) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கிருஷ்ணகுமாருக்குச் சொந்தமான வேன், கடத்தி வரப்பட்ட போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கைதான கிருஷ்ணகுமாா், ஷியாம்குமாா் ஆகியோா் கோவை, கணபதி அருகே உள்ள மணியகாரன்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கோவையைச் சோ்ந்த மைக்கேலுடன் சோ்ந்து கோவையில் உள்ள கடைகளுக்கு இந்தப் பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com