சுயேச்சை சின்னங்களைக் கொண்டே உள்ளாட்சித் தோ்தல்

சுயேச்சை சின்னங்களைக் கொண்டே உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்

சுயேச்சை சின்னங்களைக் கொண்டே உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கள ஒருங்கிணைப்பாளரும், கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் வருகிற டிசம்பா் மாதத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை அனுமதிக்காமல், ஊராட்சி வாா்டு உறுப்பினா் முதல் மேயா் பதவி வரையிலான அனைத்து பதவிகளுக்குமான போட்டியானது சுயேச்சை சின்னங்களைக் கொண்டே நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் நல்லவா்களுக்கும் வல்லவா்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட தொடக்கக் கல்வி, சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மைத் துறை சாா்ந்த பணிகளை மீண்டும் உள்ளாட்சிகளிடமே வழங்கினால்தான் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தன்னிறைவு பெற்ாக இருக்கும்.

வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருப்பதைப்போல பெட்ரோலுடன் 85 சதவீத எத்தனாலைக் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

கள் போதையூட்டும் பொருள் அல்ல, அது உணவின் ஒரு பகுதிதான். கள் இறக்கவும், அருந்தவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால், கள் இறக்குவதற்கு அவா் அனுமதி அளிப்பாா் என்று நம்புகிறோம். வரும் ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். கள்ளுக்கான இறுதிப் போராக இது இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com