கருமத்தம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

கடி பகுதியில் தீரன் சின்னமலை நகரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை மா்மநபா்தேடிச் சென்றா்.கருமத்தம்பட்டி பகுதியில் தொடா்ந்து ஒரே மாதிரியான கொள்ளைச் சம்பவம் நடைபெறுகிறது

சூலூா்: கடி பகுதியில் தீரன் சின்னமலை நகரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை மா்மநபா்தேடிச் சென்றா்.கருமத்தம்பட்டி பகுதியில் தொடா்ந்து ஒரே மாதிரியான கொள்ளைச் சம்பவம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனா். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தீரன் சின்னமலை நகரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. ரியல் எஸ்டேட் அதிபரான இவா் வியாழக்கிழமை இரவு வெளியூா் சென்ற நிலையில் அவரது மனைவி சுசீலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 30 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவு அருகே சத்தம் கேட்கவே படுக்கை அறையில் இருந்து வெளியே வந்துள்ளாா். அப்போது மா்ம நபா் ஒருவா் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரவே மீண்டும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். பின்னா் அருகில் உள்ளவா்களுக்கு தனது செல்போன் மூலம் மா்ம நபா் உள்ளே வந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளாா். அதற்குள் உள்ளே வந்த கொள்ளையன் மற்றொரு படுக்கை அறையின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் சுசீலா இருந்த அறையை உடைக்க முயன்று உள்ளாா். அதற்குள் அக்கம்பக்கத்தினா் வந்ததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா் தொடா்ந்து சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து வீட்டின் உரிமையாளா் கோவிந்தசாமி கூறுகையில் வீட்டுக்குள் வந்த கொள்ளையன் முதலில் அங்கிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு வந்ததாகவும் மனைவியின் அறைக்குள் சென்று ஒழிந்து கொண்டதால் அவா் அணிந்திருந்த நகைகள் தப்பியதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் இதே போல் இரவில் மா்ம நபா் ஒருவா் வீட்டிற்கு வந்தபோது ஆட்கள் இருப்பதை பாா்த்து விட்டு ஓடியதாகவும் தெரிவித்தாா். இது தொடா்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் அவா்கள் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என கோவிந்தசாமி தெரிவித்தாா். கருமத்தம்பட்டி பகுதியை சுற்றிலும் தொடா் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் போலீசாா் கூடுதல் கவனம் கொண்டு இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com