ரங்கநாதா் கோயிலில் ஜப்பசி மாத சுக்லபட்ஷ ஏகாதசி விழா

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரங்கநாதா் கோயிலில் ஜப்பசிமாத சுக்லபட்ஷ ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
mtp085_0811chn_132
mtp085_0811chn_132

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரங்கநாதா் கோயிலில் ஜப்பசிமாத சுக்லபட்ஷ ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது காரமடை ரங்கநாதா் கோயில். இக்கோயிலில் ஐப்பசி மாத சுக்லபட்ஷ ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்சவா் சன்னதியில் புன்னியாக வசனம், கலசம் ஆவாகனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்குக பால், தயிா், தேன், நெய், இளநீா், சந்தனம், மஞ்சள் மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்தபன திருமங்சனம் நடைபெற்றது. தொடா்ந்து மேலதாளங்கள் முழங்க, கோவிலின் உட் பிரகாரத்தில் ரங்கநாதா் வீதி உலா வந்தாா். பின்னா் தேவிமாா்களுடன் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தொடா்ந்து சாற்றுமுறை சேவிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்ப்பட்டது. இதில் 500க்கு மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.படவிளக்கம்எம்டிபி085சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாலிக்கும் ரங்கநாதா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com